பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix வாழ்வும் பணியும் 1935 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் தங்கை ஆண்டாளின் நன்மைக்காகவும் சிற்றன்னை செல்லம்மாள் அவர்களின் விடாப்பிடித் தூண்டுதலுக்கும் ஆட்பட்டு ஆதிலட்சுமி என்ற உறவுக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். என் தங்கைக்கும் எனக்கும் ஒரே தாளில் சேலிய மேட்டில் திருமணம் நடந்தது. - என் மனைவி சிற்றுார் எழுதத் தெரியாதாள் பொன்னைப் பொருளை அறிவாள்: புகழறியாள் அன்னாளின் ஊக்கம் எனக்கூக்கம் ஆகிடுமோ பின்னாள் செயலெதுவோ பேச்செடுக்க வேண்டாம்! இரண்டாண்டுகள் வேலை கிடைக்காமல் தந்தையின் உழைப்பில் உண்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். அந் நாளில் எதை மறந்தாலும் தமிழ் இலக்கண இலக்கியத் தொடர்பை மறவாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந் தேன். பாரதிதாசன் பாடல் என்றால் எனக்கு உயிர் அவர் கவிதை நூல்கள் ஒவ்வொன்றையும் பன்முறை படித்து மகிழ்வேன். 1937 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15 ஆம் தேதி தற்காலிகத் தமிழாசிரியர் பதவியை முன்னாள் புதுவை நகர மன்றத்தலைவர் மறைந்த இரத்தினவேலுப் பிள்ளை எனக்கு வாங்கித் தந்தார். நான் முதலில் ஆசிரியப் பணியைத் தொடங்கியது உழவர் கரை பூேட்டில் ஆகும். அப்பொழுது எனக்கு ஊதியம் 25 ரூபாய் அன்றைய விலைவாசியில் அதிலேயே மாதம் ரூபாய் பத்து மிச்சம் பிடிக்கலாம்.: நினைத்துப் பார்க்கின்: அன்றைய விலைகளுக்கு இன்றைய விலைகள் தாறுமாறாய் ஏறியுள்ளன. ஒன்பது மாதத்திற்குப் பின் அதாவது 24.9.1937 இல் நுழைவுத் தேர்வு (Concours) வந்தது. அந்நாட்களில்