பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хx இன்று போன்று பத்துத் திங்கள் B. T. பயிற்சியோ இரண் டாண்டுகள் ஆசிரியப் பயிற்சியோ இல்லை. இரண் டாண்டுகள் ஆசிரியர்கள் வகுப்பு நடத்தி முடிப்பதோடு எழுத்து, வாய்மொழித் தேர்வு மற்றும் அரை நாள் வகுப்பு மேற்பார்வைக்குப் பின்னரே 3. Tக்குச் சமமான C. A. P. தேர்வில் வெற்றிபெற வேண்டும். அதன் பின்னரே ஊதிய உயர்வுகள் கிடைக்கும். அப்பொழுதெல்லாம் ஆசிரியர் பயிற்சிக்குத் துணை புரியும் தமிழ் நூல்களே கிடையாது. பிரெஞ்சு நூல்களைக் கற்றே தமிழில் விடை எழுத் வேண்டும். இந்த C. A. P. ஆசிரியப் பயிற்சித் தேர்வில் 1940 ஆம் ஆண்டு வெற்றி பெற்றேன். பல ஊர்களுக்கு மாற்றலாகி என் ஆசிரியப் பணி நடந்துகொண்டே இருந்தது. இந்த நாட்களில்தான் கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வும் தமிழ் இலக்கியங்களைப் பயில வேண்டும் என்ற வேட்கை யும் மன்றங்களில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்ற துடிப்பும் ஏற்பட்டது. எனக்கென்னவோ பாரதிதாசன் நூல்களில்தான் தனிவெறி. அவரது து.ால் களைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்து மகிழ்வேன். அவரைப்போல எளிய நடையில் இனிய பாடல்கள் எழுத வேண்டுமென்ற உணர்வால் உந்தப்படுவேன். நினைத்துப் பார்க்கின் அந்நாட்களெல்லாம் பசுமையான நாட்க ளாகவே எனக்குத் தோன்றுகின்றன. 1942 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை புதுவையை அடுத்த இரெட்டியார் பாளையத்தில் ஆசிரியப்பணி புரிந்து கொண் டிருந்தேன். அப்பொழுது மதுரையிலிருந்து கோ. தா. சண்முக சுந்தரம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு ஆதித்த னாரால் நடத்தப்பட்ட "தமிழன்' என்ற திங்களிதழ் வெளி வத்து கொண்டிருந்தது. அதில் பாரதியார் பிறந்த நாளுக்காக-'பாரதி நாள் இன்றடா பாட்டிசைத்து. ஆடடா" என்ற பாடலை 'பாரதி நாள்' என்ற தல்ை ப்.