பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xx! பில் எழுதியிருந்தேன். அப்பாடலே நான் எழுதிய முதற் பாடலாகும், என் விருப்பப்படி பாடல் வெளிவந்தது. ஆசிரியரிடமிருந்து பரிசு ரூ 10ம் பாராட்டுக் கடிதமும் வந்தன. என் புகைப்படமும் வாழ்க்கைக் குறிப்பும் கேட்டு எழுதியிருந்தார் ஆசிரியர். மறுவெளியீட்டில் என் புகைப் படமும் வாழ்க்கைக் குறிப்பும் வந்தது. அதோடு இவர் பாடல் எளிமையும் இனிமையும் மிகுந்தன: ஏதோ ஓர் இலட்சிய வெறியில் பாடுகிறார்; இவர்க்கு நல்ல எதிர் காலம் உள்ளது.” என்ற தமிழன் ஆசிரியரின் பாராட்டுரை யும் வந்தது. முதற் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு என்னை மேலும் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதும் துணிவைத் தந்ததுரங்கசாமி என்ற என் இயற்பெயரின் முதலெழுத்தை யும் கடைசி எழுத்தையும் சேர்த்து 'ரமி' என்ற புனை பெயரில் தமிழனில் தொடர்ந்து பாட்டெழுதலானேன். தமிழன் ஆசிரியருக்கு ரமி என்ற புனை பெயர் பிடிக்கா மற் போய் வாணிதாசன்' என்ற புனைபெயரில் எழுதுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார். பாரதிதாசன், வாணிதாசன் - பலமுறை இச்சொற் களைச் சொல்லிப் பார்த்தேன். ஆசிரியர் பெயர் பாரதிதாசன்; மாணவர் பெயர் வாணிதாசன்; பாரதியும். வாணியும் கலைமகளைக் குறிக்கும் சொற்கள்தாமே : வாணிதாசன் என்ற புனைபெயரை ஏற்றுக் கொண்டு தமிழன் ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றுவதென முடிவு செய்தேன். அன்று முதல் வாணிதாசன் என்ற பெயரே எனக்கு நிலைத்து விட்டது. எனது பாடல்களைத் தமிழன் பத்திரிகைக்குப் பிறகு பொன்னி', 'காதல்’, முதலான பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. திராவிட நாடு, முத்தாரம், முரசொலி, மன்றம், குயில் போன்ற பல ஏடுகளில் எழுதியுள்ளேன். நான் அதிகமாக எழுதியது புதுக்கோட்டை பொன்னி ஏட்டில் என்பதை என்னால் மறக்கமுடியாது. பாராட்டுக் கடிதங்கள், ஊக்கக் கடிதங்