பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii சிவ. கண்ணப்பா அவர்களும் மாற்றப்பட்டார். இங்கு ஒன்றை நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். அவர் தந்தை சிவகுருநாதன் புதுவை இலப்போர்த் பெண்கள் பாடசாலையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். பாடசாலை நூலகத்திலிருந்து சங்க கால இலக்கண இலக்கிய நூல்களை அவர் வாயிலாகப் பெற்று தமிழறிவை வளர்த்துக் கொண்டேயிருந்தேன். காரைக்காவில் பல இலக்கிய நிகழ்ச்சிகளில் பல தமிழறிஞர்களோடு நானும் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவேன். கற்றறிந்த அறிஞரோடு நாமும் கலந்து கொள்கிறோமே என்ற பயம் எனக்கு ஏற்பட்டதேயில்லை. துணிவோடு கலந்து கொள்வேன். இரவில் காரைத் தமிழன் பர்களும் நானும் தொல்காப்பிய அறிவைப் பகிர்ந்து கொள்வோம். பலர் என் சொற்பொழிவைப் பாராட்டினர். என் போல் பணிபுரிந்த தமிழாசிரியர் சிலர் இவரென்ன தமிழில் பெரிய பட்டதாரியா? எங்களைப் போல் B. 1. தானே என்று குறை கூறியதுண்டு. தமிழ்ப்பட்டதாரி வித்வானுக்குரிய தமிழறிவை நான் வளர்த்துக் கொண்டிருந்த தென்னவோ உண்மை, ஆனால் அவர்கள் கூறுவது போல் வித்துவான் பட்டம் நான் பெற வில்லையே என்ற ஏக்கம் என்னை உறுத்திக் கொண்டே யிருந்தது. - - பல ஏடுகளுக்கும் நான் கவிதைகள் எழுதிக் கொண் டிருந்தாலும் காஞ்சியிலிருந்து அறிஞர் அண்ணாவால் நடத்தப்பட்ட திராவிட நாடு இதழுக்கு எழுத வேண்டு மென்ற எண்ணம் காரைக்காவில் பணிபுரியும்போதுதான் ஏற்பட்டது. 'விதவைக்கொரு செய்தி' என்ற தலைப்பில் நான்கு வெண்பாக்கள் எழுதி திராவிட நாடு இதழுக்கு அனுப்பியிருந்தேன். அன்றிருந்த நிலையில் என்பாடல் வெளியிடப்படுமோ என்னவோ என்ற அய்யமே என்னுள்