பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv இருந்தது. ஆனால் என்பாடல் உடனே திராவிட நாடு முகப்பட்டையில் வெளிவந்திருந்தது. அண்ணாவின் பாராட்டும் தொடர்ந்து எழுதுமாறு கடிதமும் வந்தன. நினைத்துப் பார்க்கின் நான் அன்றடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தொடர்ந்து திராவிட நாடு, விடுதலை, புதுக்கோட்டையிலிருந்து வெளி வந்த பொன்னி முதலிய ஏடுகளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன். 1945 ஆம் ஆண்டு பாகூர்ப் பாடசாலைக்குக் காரைக் காவிலிருந்து மாற்றப்பட்டேன். என்னுள் தமிழ்ப் பட்ட தாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. தமிழாசிரியராகப் பணி LyfiþStt á AST Lff 55 Entrance, Preliminary. Final ஆகிய தேர்வுகளை எழுதலாம் என்பதோடு கல்லூரியில் பயிலாமல் வீட்டில் பயின்றே தேர்வெழுதலாம் என்ற சலுகையும் இருந்தது. நான் ஒரே மூச்சில் இரவோடு இரவாகக் கண் விழித் துப் பயின்று ஆண்டிற்கு ஒரு தேர்வு என எழுதி 1948 ஆம் ஆண்டு வித்துவான் பட்டம் பெற்றேன். அன்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கட்கு ரூபாய் 10 ஊதியத் தோடு கூட்டிக் கொடுத்தும் வந்தது. பட்டதாரியானது ரூபாய் பத்து கூடுதல் ஊதியம் பெற்றது ஆகிய இரட்டைப் சயனை அத்தேர்வில் நான் பெற்றேன். நான் வித்துவான் பட்டதாரி என்ற காரணத்தாலும் பிரெஞ்சு மொழி கற்றுள்ளேன் என்ற காரணத்தாலும் நான் பயின்ற கல்வே கல்லூரிக்கே 1948 ஆம் ஆண்டு. தமிழ்ப் பேராசிரியராக மாற்றப்பட்டேன். அங்கே நான் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் பணிபுரிந்தேன். நினைத்துப் பார்க்கின் அந்த மூன்றாண்டுக் காலமே என்னை இன்றுள்ள கவிஞன் நிலைக்கு மேம்படுத்திய பொற்கால மாகும். அந்த மூன்றாண்டுக் காலத்தில் கருத்து வேற்றுமை யால் நான் Ꮏ-1è தொல்லைகள் அடைந்தாலும் முன்னேற்றம் அடைந்ததே அதிகமென்பேன்.