பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV/ பின்னர் நான் பல ஊர்களுக்கு மாற்றலாகி ஆசிரியப் பணி புரிந்தேன் என்றாலும் எங்கும் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு போய்க் குடும்பம் நடத்திய தில்லை. என் தந்தை அரசாங்க வேலையிலிருந்து ஓய்வு பெற்று சொந்த வில்லியனுரர் வீட்டை இழந்து முடக்குவாத நோயோடு சேவியமேட்டிற்கே குடி பெயர்ந்தார். எனக்குத் தாயூரும் பாட்டியூரும் சேலியமே.ே ஆகும். அவ்வூரிலேயே என் இளமைக் காலத்தைக் கழித் தேன். அங்கே நான் ஒரு குடிசை வீட்டை விலை பேசி வாங்கிக் குடும்பம் நடத்தி வந்தேன். வழக்கம் போலவே புதுவையிலுள்ள உணவு விடுதியிலேயே உண்டு பணி புரிந்து வந்தேன். விடுமுறை நாட்களில் சேலியமேடு வந்து போவேன். ~~ கல்லூரி ஒய்வு நேரங்களில் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் (கோபதி) நடத்தி வந்த கடையிலும் பாவேந்தர் வீட்டிலுமே பொழுதுபோக்குவேன். அந்த நாட்களெல் லாம் எனக்கு எவ்வளவோ பயனுள்ள நாட்களாக இருந்தன. நினைத்துப் பார்க்கின் அந்த நாட்கள் தான் என் தமிழறிவையும் கவிதையாக்கும் திறனையும் வளர்த்தன என்று கூறவேண்டும், அதற்குப் பெருந்துணை புரிந்தவர் என தாசான் கவியரசர் பாரதிதாசனே யாவார். 28-5-1950 இல் கோயமுத்துாரில் டெத்தாம் பாளையம் பழனிசாமி பலர் கூட்டுறவோடு முத்தமிழ் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற ஏற்பாடு செய் திருந்தார். அந்நிகழ்ச்சியில் மறைந்த நாவலர் சோம சுந்தர பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.எஸ். கிருஷ்ணன், மதுரம், கே. ஆர். இராமசாமி போன்றோர் கலந்து கொண்டனர். இரவில் ஒவ்வொரு நாளும் நாடகம் நடை பெறும் கழகத் தோழர்களும் தலைவர்களும் பங்கேற்று தாடகம் நடத்தினர். ஒவ்வொரு நாடகத்திலும் அறிஞர்