பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXXV குரைப்பாருக் கஞ்சாதே எனகாளும் சொல்லும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான் இன்றில்லையே என் பாட்டைக் கண்டு களித்து வாழ்த்த என்கின்ற துயரமே தலைதுாக்கி நிற்பதை நான் உணர் கிறேன். குறிக்கோள் என் குறிக்கோளெல்லாம் அவரவர் தாய்மொழி சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். சமுதாயம் சீர்திருந்த வேண்டும், ஏழை பணக்காரன் இல்லாத பொதுவுடைமை நாட்டில் நிலைபெற வேண்டும் என்பதாகும். என் பாடலில் பல இடங்களில் இக் கருத்தே வலியுறுத்தப்பட்டிருக்கும். "ஓங்குக ஓங்குகவே-தமிழ் உலகோடே உயர்வாக நிலைபெற்று நீடுழி’! கரங்கி மெலியும் ஏழை பாட்டாளி உழவர்கள் இன்னல்களைக் துவாழ்வை கன்னிலை யாக்கும் தமிழ்” "தாழ்வு உயர்வுஎனும் சாதியும் நீக்கி சஞ்சல மில்லாத வாழ்வைப் பொதுவாக்கி ஏழை எளியவர் இல்லாத தமிழ்காட்டை இன்று சமைப்போம் வெட்டிவீழ்த்துவோம் தமிழ்க்கேட்டை’’ உன்னை மறந்துகான் வாழ்வேனோ?-என் உயிருக்குயிர் ஆகிய செந்தமிழே!-அமுதே அன்னையை மறந்தாலும் அப்பனை மறந்தாலும் அன்பு மனைவிமக்கள் அணைப்பை மறந்தாலும்”