பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv கேடயமும் தந்த பாராட்டினர். விழாவில் தமிழக அறிஞர் களும் புதுவை அமைச்சர்களும் பங்கு கொண்டனர். புதுவைத் தமிழ்ச் சங்கமும் என்னைப் பாராட்டத் தவறவில்லை. அது புதுவை நகர மன்றத்தில் 6-5-73இல் பாவலர்மணி என்ற பட்டத்தையும் வெள்ளிக் கேடயத்தை யும் எனக்களித்து என்னைப் பாராட்டிச் சிறப்பித்தது, விழாவில் புதுவை அமைச்சர்கள் நகரத் தந்தை குபேர் முதலியோர் பங்கேற்று என்னைப் பாராட்டினார்கள். நினைத்துப் பார்க்கின் இவையெல்லாம் என் தமிழ்க் கவிதைகட்குக் கிடைத்த பரிசென்றாலும் எனக்கு ஊக்க மும் ஆக்கமும் அளித்துதமிழ் அறிஞர்களில் பலர் எனக் களிக்கப்பட்ட பாராட்டைக் கண்டு களிக்காமல் அமரர் ஆயினரே என்ற ஏக்கமே என்னுள் குடிகொண்டுள்ளது. சிறப்பாக எனதாசான் பாவேந்தர்; தமிழ் மக்கள். ஆசான். அவர், வீழ்ச்சியுற்ற தமிழருக்கு வலிவூட்டும் குன்றம் மெல்லியரின் வாழ்விற்கு புரட்சிவழிப் பாட்டை சூழ்ச்சியினால் வளர்ந்தமித்க் கோட்டைக்கு வேட்டு ஒருசிலரின் சொத்தாக இருந்ததமிழ் ஊற்றைத் தாழ்ச்சியின்றி தமிழ் காட்டு மக்களெலாம் உண்ண எளிமையொடு'சுவையூட்டிச் சரிசெய்த வள்ளல் ஆழ்கடலில் முத்தொத்த அறிவுரையை கல்கும் எனதாசான் கவியரசர் தமிழ்மக்கள் ஆசான் சிரிக்கின்ற அழகெல்லாம் செஞ்சொல்லால் தீட்டிச் செநதமிழின் நயம்விளங்கச் செய்திட்ட ஆசான் வரிப்புலியே இளந்தமிழா எனவிளித்து நாட்டில் வளர்கொடுமை அறியாமை வறுமையினைக் காட்டி ஒருநாளும் தயங்காதே தமிழ்வாளைத் தூக்கே ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஏற்றம்