பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii பல்லிளிப்பும் கண்ணிருமே நாட்டில் மலிந்திருப்பதைக் காணலாம். நினைத்துப் பார்க்கின் இந்நிலை நாட்டில் நீடித்தால் எதிர்காலம் என்னாகும்? பயங்கர சூனியமே தோன்று கிறது. நாட்டையும் மக்களையும் அரசியலையும் சீரும் சிறப்புமாக நடத்திச் செல்லும் விடிவெள்ளிகள் கட்டாயம் இனித்தோன்றியே ஆகவேண்டும் என்று நான் விரும்பு இன்றேன். தோன்ற வாழ்த்துகின்றேன். விழைவும் வேண்டுகோளும் - அண்மையில் என் அய்ம்பத்தொன்பதாம் ஆண்டு தொடக்கக் கவிதைமலர் வெளியிடப்பட்டது. அதற் கென்று க. பொ. இளம் வழுதி என்னைப் பேட்டி கண்டார்: என் விழைவு என்னவென்று கேட்டார். - சென்றது சென்றதுவே என்றும் திரும்பாது: கன்றே இனிபுரிக; கற்றமிழைத் தாய்மொழியை ஊன்உடல்போல் ஒம்பி உலகமொழிக் கெல்லாம் தேன்வழங்கச் செய்க, திருகாட்டு மக்கள் பகுத்துண்டு வாழ்க, பகைநீக்கி வாழ்க: தொகுத்துரைக்கும் நூலின் துணைகொள்க; - . என்றென்றும் ஒன்றிரண்டு பெற்றே உயர்குடியின் நற்பெயரை என்றும் கிறுத்தல் இனிது! எனும் எனது விருப்பத்தை மக்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே என் வேண்டுகோள். மக்கள் துணை புரிவார்களாக! அதுவே எனக்கு என்றென்றும் நிலைத்து நிற்கும் பெருமகிழ்ச்சியாகும். எனக்கு ஒரு பேராசை உண்டு அதாவது,