பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கல்லையும்.நற் செம்பையுமே கசிந்துருகிப் பாடிக் களித்திருந்தார் அன்றிருந்தோர்; சூழ்நிலைமைக் கேற்பப் பல்தெரிய முன்காட்டிப் பசிகாட்டி ஏங்கும் பஞ்சையனும் பாரதத்தின் முடிசூடா மன்னன்! எல்லோரும் அரசாளும் வாய்ப்புடையோர் இதுதான் இன்றுள்ள குடியரசின் பெருஞ்சிறப்பாம்! இங்கே இல்லோரும் உள்ளோரும் இலையென்று காட்டும் ஏற்றமிகு இலக்கியத்தை நாடடைய வேண்டும்! 7 பிறநாட்டான் கம்காட்டில் பிழைப்புக்கு வந்து பிரித்தாளும் சூழ்ச்சியால் நம்நாட்டை வென்று மறநாட்டின் வளமெல்லாம் அவன்காட்டில் தேக்கி வறுமையைப் பரிசாக கமக்களித்துப் போனான்! சிறைப்பட்ட் நம்நாடு விடுதலையைக் காணச் செந்தமிழால் பாரதியார் இலக்கியத்தைச் செய்தார்! கறைபட்ட நம்நாடு விடுதலையைப் பெற்றுக் கால்நூறு நல்லாண்டு காண்கின்றோம் வாழ்க! 8 நன்மைபல நம்நாடு விடுதலைக்குப் பின்னர் நாடோறும் பல்துறையில் அடைந்துவரல் உண்மை! நன்மைபல அடைந்துவரும் பிறநாடும் நாமும் நானூறு காதவழி இடைவெளியில் உள்ளோம்! தொன்மைபல எண்ணிளண்ணி இதுபோதும் என்றே தொடைநடுங்கி போல்வாழ்தல் அறிவாற்றல் ஆமோ? வன்மைபல மேற்கொண்டே உழைப்பதற்குத் தூண்டும் வளமான புதுநோக்க இலக்கியங்கள் தேவை! - 9 பாவேந்தர் காட்டிடையில் நிலவுகின்ற ஒவ்வாப் பழமையெனும் சாதிமதம் கைம்மைநிலை ஏய்த்தல் நாவேந்தர் போலெதிர்த்தே நாட்டுகிலை காட்டி நல்லதமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்தைச் செய்தார்!