பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

领 பொன்னான வளமைமிகு வாழ்வுக்குத் தாவப் புதுக்கருத்தைப் பகுத்தறிவை மரபுவழி நின்றே என்னருமைக் கவிஞர்காள்! குமுகாய மாற்ற எழுச்சிமிகு இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 17 நமையீன்ற தாய்நாட்டின் கானிலத்தி னூடே கல்லியற்கை தருகின்ற நிலவளங்கள் உண்டே! சுமைதாங்கி போல்பழத்தைத் தாங்குகின்ற தோப்பும் தொங்குகின்ற தேனடையும் பரந்தவயற் காடும் - உமக்காக இருக்கின்றோம் எனச்சொல்லக் கேட்டும் ஓய்ந்தொதுங்கி வாழ்கின்ற மக்களினம் உய்ய அமைவாகச் சிந்திக்க அறிவூக்கம் கொள்ள அழகுதமிழ் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 18 எத்தொழிலும் இழிவில்லை இவ்வுலகில்! வேலை ஏதேனும் செய்யாமல் இருப்பவரே பேதை! - கைத்தொழிலைக் கற்றுக்கொள் இழிவில்லை! என்றும் கவலை இலை வளமைமிகு, கல்வாழ்வு கூடும்! - சுத்திஎடுத் துழைப்பதுதான் ஒருசிலர்க்கே நாட்டில் சொந்தமென நினைக்கின்ற கடுகுள்ளம் வேண்டாம் தித்திக்கும் சொற்பாவால் கலைவண்ணப் பண்பால் திருத்துகின்ற இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர்!19 வளமான வாழ்வுக்குப் பலபொருள்கள் தேவை! மரச்சாமான் நூலாடை மண்சட்டி பானை குளம்குட்டை குட்டையிலே தூய்மைசெய்தே ஆடை கொடுப்பவர்கள் கொத்தர்கள் முடித்திருத்து வோர்கள் உளத்தாலே மனிதஇனம; தொழில்செய்வதாலே உயர்வில்லை தாழ்வில்லை என்கின்ற எண்ணம் கிளைத்திடவே செய்வதுதான் இன்றுள்ள தொண்டு கேடகற்றும் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர். 20