பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கல்வாழ்வு பெறுவதற்கே நல்லறிவு தேவை! நல்லறிவு பெறுவதற்கே கற்றிடுதல் வேண்டும்! பல்கலையில் பயிலுகின்ற மாணவர்கள் கூட்டம் படிப்பைவிட்டுப் பிறசெயலில் பங்கேற்க வேண்டாம்! வல்லோராய் வாழ்ந்தால் வளமைமிகும் வாழ்வும்! மறவாதீர்! மறவாதீர்! எனவூக்கு கின்ற சொல்லரிய மரபுவழி யாப்புவழி கின்றே • தூயதமிழ் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர்! 21 இக்காலம் அறிவியலின் ஏற்றமிகு காலம்! எழுகின்ற புதுமையினை எடுத்துணர்த்தும் காலம்! மக்காக வாழ்வதுவோ நம்நாட்டு மக்கள்? மற்றவர்கள் மதிப்பாரோ? நுண்ணறிவு தேவை! செக்காட்டு வார்போலத் திரிவதையே விட்டுச் சிந்தித்தே அறிவியலின் நுணுக்கத்தைக் கண்டே முக்காட்டைக் கிழித்தெறியும் உணர்வூட்டு கின்ற முத்தமிழில் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 22 பிறநாட்டைப் போல்நாமும் வளமைமிகு வாழ்வைப் பெறவேண்டில் நம்நாட்டில் வாழ்கின்ற மக்கள் மறவாமல் ஒரு செயலை மனம்கொள்ள வேண்டும்! வளமான வாழ்வுக்கே அயராவு ழைப்புக் குறையாமல் செய்திங்குக் குடியோம்பல் வேண்டும் குறிக்கோளை என்றென்றும் மக்களிடைத் தூண்டும் கிறைவான பொருள்பொதிந்த நெஞ்சள்ளும் பாட்டால் நிலைத்திருக்கும் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 23 பூக்களிலே தேன்தேடும் பொறிவண்டைப் போலப் பொற்கிண்ணப் பூப்பூத்த பூசணியின் பாத்தி வாக்கினிலே காய்த்திட்ட வெள்ளரியின் கோட்டை வாய்த்திருக்கும் அணிலைப்போல் அயராது நாளும்