பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்கோடு தொழில்துறையில் உழைத்திருக்கத் தூண்டும் நுண்மாண்பை நுழைபுலத்தை வளர்க்கின்ற ஆன்ற பூக்காட்டுச் செந்தமிழால் சுவையின்பம் ஊட்டும் புதுப்போக்கில் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் - - . ត្៣ f 24 பாராண்ட முடிமன்னர் மன்னவரின் கீழே பணிபுரிந்த படைமறவர் அவரேவ லாளர் சீராண்ட பெருஞ்செல்வர் தொழிலாளர் கூட்டம் திண்ட்ாடி வாழ்ந்திருந்த திக்கற்ற ஏழை ஊராளத் துணைபுரியும் அறிவமைச்சர் பெண்கள் உயிரினங்கள் கைக்குழந்தை பசிகோயில் ஒன்றாம்! காராண்ட உலகத்தில் பகுத்துண்ணும் பண்பைக் கற்பிக்கும் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர். 25 உண்டியின்றேல் உயிரில்லை; உடற்றசையும் இல்லை; உலகத்தோர் பன்னெடுநாள் கண்டுவரும் உண்மை! மண்டிவரும் வளமெல்லாம் ஒருசிலர்க்கா சொந்தம்? வளமைமிகு வாழ்வுக்குப் பகுத்துண்ணும் பண்பைக் கொண்டிடுதல் நூலோர்கள் தொகுத்தவற்றுள் எல்லாம் குடியோம்பும் செயலுக்கே தலையென்று சொன்னார் பண்டிருந்த ஆன்றோரின் பரிந்துரையை ஏற்றுப் பயன்கல்கும் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 26 போதுமென்ற மனமேநல் பொன்செய்யும் என்று புகன்றார்கள்; மகப்பேற்றுக் கதுபொருந்தும் இந்நாள் போதுமென்றே ஒன்றிரண்டு நூல்களையே கற்றால் புலமைவந்து சேர்ந்திடுமோ? அறிவாக்கம் உண்டோ? போதுமென்ற மனம்பெற்றால் வளவாழ்வுக் கேற்ற பொருள்மிகுதி ஏற்படுமோ? பிறநாட்டார் போலத் தோதோடு நாம்வாழ, பிறர் துணைக்குப் போகப் போதுமென்ற மனம்வேண்டாம் அயராது ழைப்போம்: 21