பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மனஅமைதி அடைவதற்குப் போதுமென்ற உள்ளம் வளரட்டும்; வரவேற்போம்; நாம்துறவி அல்லோம்! இனஅமைதி செழித்திருக்கப் பிறர் நம்மை என்றும் ஏய்க்காமல் விழித்திருக்கப் போதுமென்ற உள்ள நினைவுக்கு நீள் உழைப்பை மறந்திருக்க வேண்டாம்! நெறியோடு நம்நாடு பிறநாட்டைப் போலப் பணம்பெருக்கிப் படைபெருக்கிப் பண்பூக்கம் கொள்ளப் பாட்டிசைத்தே இலக்கியத்தைச் சமைத்திடுவோம் - - 6ນເrffrl 28 நம்நாட்டின் விடுதலையை நாமடைந்து இன்று - நாலைந்தும் ஆழுதுண்டும் நாம்கடந்து விட்டோம் நம்நாட்டின் கில்வளமும் தொழில்வளமும் மற்றும் நல்லறிவு நுணுக்கமதும் அயராஉழைப்பும் - அம்மட்டோ பகுத்துண்ணும் செயல்சிறிதும் பெற்றோம்! அதுபோதும் அதுபோதும் என்றிருந்து விட்டால் பொம்மைகளின் திருமணம்போல் குடியாட்சி மாறும்! புதுநோக்கில் இலக்கியத்தைச் சமைத்திடுவோம் வாரீர் 29 வளமிகுநம் வாழ்விற்கு நாமடைந்த வெற்றி வளமைமிகு பெருவெற்றி எனும் கனவு வேண்டாம்! களம்கண்டகம்தலைவர் விடுதலைப்போர் வீரர் கனவுகண்ட வளமெல்லாம் கைக்கெட்ட வேண்டும்! உளமார அயராதிங் குழைத்துழைத்து நாளும் ஒளிமயமாம் வளமிகுநல் வாழ்வடைய என்றும் இளைப்பாற எண்ணாமல் இனியதமிழ்ப் பாடல் இலக்கியத்தைச் சமைத்திடுவோம்; இன்பமடை வோமே!30 (இக்கவிதை திருச்சி வானொலியில் 14.1-73 அன்று பொங்கற் கவியரங்கத்தில் பாடப்பட்டது.) 鸞 *;