பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l@l@് ெ தாழிலாளி-கவிஞர் வான்தாவும் நீள்தாழை உச்சி நீண்ட மலர்தாவும்; மறிகடலின் கரையோ ரத்தில் கூன்தாவும் புன்னையிலே வெண்பூ பூக்கும்: குளிர்தாவும் நீளலைகள் முழக்கம் செய்யும் தேன்தாவும் கழியெல்லாம் நீலம் பூக்கும்; சீர்தாவும் கடலூரில் வந்து சூழ்ந்த கான்தாவும் குயிலினங்காள்! கவிஞர் ஏறே! களிதாவும் பெற்றோரே! தாய்க்கு லத்தீர்! செந்தமிழால், கவிபாடித் தாய கத்தின் சீர்சிறக்கச் செய்வதற்கே தென்னார்க் காடு தந்தளித்த மாநாட்டில் பங்கு கொள்ளும் தமிழ்ப்பெரியீர்! இளையோரே! உடன்பி றப்பேl வந்துள்ள மாணவர்காள்! மங்கை நல்லீர்! மாநாட்டுக் குழைப்போரே! உங்கட் கின்று செந்தமிழால் எண்சீரால் கவிதை யாத்துத் திருவிருத்த என்.வணக்கம் செப்பி னேனே! அலைகுடையும் கரைபோல மெல்ல மெல்ல, அருகிருந்து சிந்தித்துத் திட்ட மிட் மலைகுடையும் கற்றச்சர் வாழைப் பிஞ்சாம் வடித்தெடுத்த உளியெடுத்துத் தட்டித் தட்டிச் சிலைகுடையும் செயல்பெரிதாம்; ஆனால் கன்னிச் செந்தமிழால் பாப்புனைவோர் ஏடெடுத்தால் தலைகுடையும்; கண்குடையும், பாட்டுத் தோன்றும் தாதையிவர் கலையுலகத் தாதை யாமே! எண்ணத்தை மற்றவர்கள் கண்முன் காட்ட ஏடெழுதி ஓவியத்தில் அங்கு மிங்கும் - வண்ணத்தைச் சேர்த்துவைத்தால் போதும், நீண்ட வான்தாவும்.கோபுரத்தின் மீது நல்ல