பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 சுண்ணத்தை அப்பியப்பிக் காட்ட எண்ணும் தோற்றத்தை கனியமைக்கக் கூடும்; பாட்டு வண்ணத்தை யாத்திடுவோன் எங்கும் என்றும் பிறக்கின்றான்; வளர்வதில்லை; மங்கா உண்மை மன்றிருந்து வட்டாடு வாரைப் போல வரிப்பந்தை உதைக்கின்ற மக்கள் போல கின்றிருந்து பூப்பந்தைத் தட்டித் தட்டி கிலம்வீழ்த்திக் கணக்கெண்ணி நிற்பார் போல அன்றிருந்தே இன்றுவரை பாக்கள் யாத்தோர் அரங்கிருந்து வட்டாடி யோரே ஆவர்! 'இன்றிருந்து நாளைவா’ என்றே சொல்லும் இன்கவிக்கும் யாப்பணிகள் என்றும் வேண்டும்! கூன்கிலவு பிறைநெற்றிக் கன்னிப் பெண்கள் குளிர்கிலவைப் போன்றிருந்தும் காட்ட கத்துத் தேன்கிலவுச் சொல்லின்றேல் ஆடை,இன்றேல் சிலம்பின்றேல் அணிமணிகள் இன்றேல் என்னாம்? கான்நிலவு போன்றதுவே பாட்டில் நல்ல - கற்பனையும் யாப்பணியும் இல்லை என்றால்! வான்கிலவு புயற்காற்றால் இன்பம் உண்டோ? மலர்த்தென்றல் கற்கவிதைப் பாட்டென் போமே! கார்முட்டும் மலைத்தொடரில் கல்லில் தோன்றிக் கடல்முட்டும் கிலப்பரப்பில் வற்றா தோடி நீர்முட்டும் கர்ல்வழியே கன்செய் புன்செய் நிலமூட்டும் பேராறே ஆன்றோர் செஞ்சொல் சீர்முட்டும் பாட்டாகும்; ஆன்றோர் பாடல் திசைமுட்டும் புகழ்பரப்பும் என்றும் வாழும்: வேர்முட்டும் பலாவாழை மாவும் கூட்டும் மிகுசுவையும் கவிச்சுவைக்கு மிக்கப் போமோ?