பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பின்னோர் கள் விதிவிலக்கா? இல்லை! இல்லை! பிறந்ததுவே பாப்பாடப் பின்னென் கண்டார்? முன்னோர்கள் பின்னோர்கள் போல நாமும் மூச்சுள்ள வரைபாடி வாழு வோமே! 1 சேய்மொழியை மையீன்ற காலை அன்னைத் திருத்தமுற வாயூறச் சொல்லித் தந்த יהא தாய்மொழியைத் தமிழ்மொழியை முன்னர்க் கற்றுச் சார்ந்துள்ள பிறமொழியைப் பின்னர்க் கற்று வாய்மொழியைத் தமிழ்மறையை ஆன்றோர் விள்ள மனமேற்றுப் பொருள்காடி வாழ்க்கை நாடி காய்மொழியை கனிவிலக்கிக் கங்குல் நீக்கும் கiன்கிலவாய் என்றென்றும் வாழ்வோம் நாமே! 12 பழுத்திருக்கும் மரந்தேறிப் பரந்து சென்று பசிஆறிப் பாட்டிசைக்கும் புட்கள் போல விழித்திருக்கும் நேரமெலாம் பாட்டைப்பாடி மெய்மறந்து வாழ்ந்திருப்போர் கவிஞர் எந்தச் சுழித் திருக்கும் ஆற்றினிலும் எதிர்த்து நீங்தத் துணிந்தவர்கள்! அஞ்சாதோர்! கொடுமை கண்டால் பழித்திருப்போர் பகைத் திருப்போர்! பிறருக்காகப் பாடுபடும் தொழிலாளி கவிஞர் ஆமே! 13 இருட்டறையில் இருப்போர்க்கும் எரிவிளக்கில் படிப்போர்க்கும் எங்குள் ளோர்க்கும் தெருட்டுகின்ற நல்லறிவைச் செந்நெறியைச் செந்தமிழால் செவியுள் ஊட்டிக்