பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை "வாணிதாசன் கவிதைகள் தொகுதி.3”எனும் இந்நூல் கவிஞரின் மறைவிற்குப் பின் வெளி வருகின்ற இரண்டாவது நூலாகும். 'வாணிதாசன் கவிதைகள் தொகுதி-2” எனும் பெயரில் 1981 ஆம் ஆண்டில் ஒரு நூல் வெளி வந்துள்ளமை இங்கு நினைவு கூரத்தக்கது. - இதுவரை கவிஞரின் படைப்புகளாக வெளிவந்துள்ள "தமிழச்சி, கொடி முல்லை, தொடுவானம், எழிலோவியம், இன்ப இலக்கியம், குழந்தை இலக்கியம், சிரித்த நுணா, இரவு வரவில்லை, பாட்டரங்கப் பாடல்கள்’ முதலாய பதினாறு கவிதை நூல்களிலும் இடம் பெறாமல் எஞ்சியிருந்த கவிதைகளின் தொகுப்பே 'வாணிதாசன் கவிதைகள்தொகுதி.3’’ என்ற பெயருடன் இப்போது வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். - இதிலுள்ள கவிதைகளெல்லாம் அவ்வப்போது பாட்டரங்குகளிலும், இதழ்களிலும், பிறரால் வெளியிடப் பட்ட நூல்கள், மலர்கள் ஆகியவற்றிலும் வெளியாகித் தமிழ் கூறு நல்லுலகத்து மக்களால் படித்துச் சுவைக்கப் பட்டவையாகும். கவிதைகள் வெளிவந்த இதழ்கள், மலர்கள் ஆகியவற்றின் விவரங்களை விரிவாகத் தர இயல வில்லை. எனினும் இயன்றவரை கவிதைகள் பிறந்த தேதி யினை அவ்வக் கவிதைகளின் கீழே கொடுத்துள்ளேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளைத் தேர்வு செய்யத் தொடங்கியபோது கவிஞரை மனதில் கொண்டு கவிஞர் இருந்திருந்தால் எத்தகைய பாடல்களை முதலில் அச்சாக்க முனைந் திருப்பாரோ அத்தகைய பாடல் களையே இந்நூலில் இணைக்க முயன்றுள்ளேன். இந்நூலும் இதற்கு முன்னர் (1981) நான் பதிப்பித்து வெளிவந்த வாணிதாசன் கவிதைகள் தொகுதி-2 எனும் நூலும் வெளிவர உண்மையான தமிழ் உணர்வோடு இடை