பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi விடாது எனக்கு ஊக்கமூட்டி எனது நிலையான வளர்ச் சிக்குப் பெரிதும் உதவி வரும் மனிதப் பெருந்தகை டாக்டர் பொற்கோ அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி என்றென்றும் உரியது. - தந்தை விட்டுச் சென்ற படைப்புகளைத் தமிழுலகின் கையில் ஒப்படைப்பது தனயன் கடமை எனும் உணர்வினை மறைமுகமாக ஊட்டி வளர்த்தவரும் கவிஞரின் நெருங்கிய நண்பருமான புலவர் த,அறிவழகன் அவர்கட்கும் இந் நூலாக்கத்தின் பல்ன்ேறு பணிகளுக்கும் உடனிருந்து அவ்வப்போது நல்ல திட்டங்களைத் தந்துதவிய திரு மருதுரர். அரங்கராசன் எம்.ஏ., எம்ஃபில் , திரு. சுதர்சன் எம்.ஏ., செல்வி வசந்தாள். எம்.ஏ., எம்ஃபில்., திரு இரா. குலோத்துங்கன் எம்.ஏ., எம்ஃபில். ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூல் வெளிவர நிதி உதவி செய்து ஊக்கப்படுத்திய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கும் நூலின் அச்சாக்கத்திற்குப் பெரிதும் உதவிய மூவேந்தர் அச்சக உரிமையாளர் திரு. மூவேந்தர் முத்து அவர்கட்கும் இங்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டவன். என் தந்தையார் தமது இறுதிக் காலத்தில் "நினைத்துப் பார்க்கின்...' என்ற தலைப்பில் எழுதி வைத்துச் சென்ற வாழ்க்கைக் குறிப்பினை இந்நூலோடு இணைத்து வெளியிடும் வாய்ப்பு கிடைத்தமை குறித்து'மன நிறைவு கொள்கிறேன். இந்நூலை இயன்றவரை சொற்பிழை, பொருட்பிழை யின்றிப் பதிப்பிக்க முயன்றுள்ளேன். இதற்கு முன் கவிஞரது படைப்புகளாக வெளிவந்த கவிதை நூல்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்து வரவேற்ற தமிழுலகிற்கும் தமிழன்பர்கட்கும் எனது மனமார்ந்த நன்றி. அதே போன்று இப்போது வெளிவருகின்ற இக்கவிதை நூலுக்கும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்து வரவேற்பார்கள் என நம்பு கிறேன். " . r சேலியமே - • 部 * 奪 ஆகஸ்ட்டு ใ984 - அரங்க கலங்கிள்ளி