பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமதண்ணா வாழியரே! சீர்மேவு காஞ்சித் திருமகன் அண்ணா செழுந்தமிழைப் பார்மேவு மக்கள் மனத்தில் விளக்கிப் பசுமரம்சேர் கூர்மேவு ஆணியெனக் கூறும் திறத்தோன் குளிர்விழியோன்! நீர்மேவு நீள்கடல் போல நிலைத்தண்ணா வாழியரே! 1 தேன்மிகு செஞ்சொல் திறத்தால் திசைமாறும் செந்தமிழர் கூன் மிகு நெஞ்சைக் கொடுமை அரசைக் குடிகெடுக்கத் தான்வளர் நாட்டில் தலைகிமிர் இந்தியைத் தட்டியோட்ட வான் எழு ஞாயிறு வந்தான் நமதண்ணா வாழியரே! 2. மக்கள் துயருறும் மடமை அரசியல் மாய்ப்பதுவே மக்கள் பிறவியை வாய்த்தவர் கைக்கொள் அறச்செயலாம்! மக்கள் அறிவை வளத்தை அரசைத் திருத்திடுவோன் மக்கள் தலைவன்கம் அண்ணா மலைபோல வாழியரே! 3. சூழும் அலைகடல் முப்புறம் சூழ்ந்திடு தென்னகத்து வாழ்வை அரசை வளஞ்செய் மலையிடை வந்துதித்த ஆழ்கடல் ஞாயிறாம் அண்ணா தமிழர் தனித்தலைவன் ஏழெட்டு) அகவையை எட்டினன் வாழியர்! வாழியரே! 4. உலையில் கொதிக்கும் உணவாம் அரிசிகல் காய்கறிகள் விலையை எதிர்த்துச் சிறையில் இருந்தே வெளிவந்தோன்! கலையை வளர்த்தே தமிழை வளர்க்கும் கருத்துடையோன்: மலையில் பிறந்த மருந்தாம் எமதண்ணா வாழியரே! 5 சந்தில் மறைந்தும் பசுத்தோல் அணிந்தும் தமிழ்ஒழிக்கப் பொந்துப் புலியாம் புகவரும் இந்திப் புணர்மொழியை எந்தத் திசையில் வரினும் எதிர்த்துச் சிறைபுகுந்து வந்தவர் அண்ணா! அறிஞர் வளத்துடன் வாழியரே! - 6