பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மக்கள் மனத்துள் படிந்த பழமையாம் மாசுகளைச் செக்கச் சிவந்தநற் செந்தேன் மொழியால் செவியுறுத்திச் சிக்கல் அவிழ்க்கும் நமதண்ணா வாழியர் காலிரண்டு திக்கில் புகழைப் பரப்பிச் சிறப்புடன் வாழியரே! என்றும் அரசியல் ஏற்றம் அடைந்தால் இனிமைமிகும்! நன்றே அரசியல் நாட்டிட வேண்டும் நலம்பெருகும்! என்றே அமைச்சை அரசை அணுகி அறிவுரையாம் பொன்றும் கருத்தைப் புகலும் அண்ணா வாழியரே! உறங்கும் புலியாம் தமிழகம் வாழும் உடன்பிறப்பைக் கறங்கும் முரசெனக் கற்றவர் கல்லார் மனம்பதிய அறங்களைக் கூறி அரசியல் கூறி அறிவுறுத்தும் திறஞ்சேர் முதலமைச்(சு) அண்ணா புகழுடன் வாழியரே! முப்பால் முழுதும் படிக்கத் தமிழர் முனைந்துவிடில் தப்பா(து) அறமும் அரசும் வளமும் தழைத்திருக்கும்! எப்பார் உலகும் இனிக்கும் திருக்குறள் வள்ளுவரை ஒப்பார் அறிஞர் கமதண்ணா ஒப்பாராம் வாழியரே! புன்னகத் தீஞ்சொல் புதுமை எழுத்தால் புதுக்கருத்தை கன்னிலை மக்கள் அடைந்திட நாடு வளம்கொழிக்கத் தென்னக வால்டேர் அறிஞராம் அண்ணாநல் கீர்த்தியுடன் இந்நாள் அய்ம்பதும் ஆறும் அடைந்தனர் வாழியரே! மக்கள் பிறவியில் வாழ்ந்த கறுப்பர் வளமையெலாம் திக்குத் தெரியாத் திசையினர் உண்டு திளைத்திருக்க மக்கள் அடிமையை மாய்த்தவர் மாப்புகழ் லிங்கனும் தென் மக்கள் உளம்கிறை லிங்கனும் எம்.அண்ணா வாழியரே! ஏழைப் பெருங்குடி மக்கள் உழைப்பை இருட்டடித்துப் பேழை கிரப்பும் பெருந்தனக் காரர் பிழைதிருத்தி வாழ வழியை வகுக்கும் தமிழர் முதலமைச்சர்! வாழிய அண்ணா! அவர்வழித் தம்பிகள் வாழியரே! 1 () 1 4 12 13 இக்கவிதை 1964 ஆம் ஆண்டு நவம்பருக்கு முன் எழுதப் பட்டது.