பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிறு நம்அண்ணா! வானேறி மலைதாவி மலைமுகட்டில் தோயும் மறிகடலின் மறுபிறப்பாம் காரினங்கள் நீண்ட கூனேறிக் கொம்பொடிந்த குறுங்கழுத்து யானை குன்றத்து மழைகண்டே குரல்கொடுக்கும்; சாரல் மானேறிப் பிணைஅழைக்கும்; மலராடும் தென்றல்; வளர்புன்னைக் குறிஞ்சியிலே வாழுகின்ற மக்கள் தேனேறிச் சொட்டுகின்ற செஞ்சொல்லும் வாழ்வும் செழிக்கவரு ஞாயிறுநம் அண்ணாவே வாழ்க! 1 கொடிபடர்ந்த கிளைதாழ்த்தி மறியூட்டும்; ஆயன் குழல்ஓசை கேட்டருகில் குதித்துவரும் குட்டி மடிபடர்ந்த காம்பிருந்தே வடித்தெடுத்த பாலின் மணம்வீசும், வரகுதினை மணம்வீசும்; முல்லை அடிபடர்ந்த ஆய்ச்சியர்கள் அசைந்துநடை போட அயலொதுங்கும் பெண்புறவு: முன்னாளின் இன்பம்! மிடிபடர்ந்த நிலைமாற்ற நல்வாழ்வைக் ساسانی . விண்ணெழுந்த ஞாயிறுகம் அண்ணாவே வாழ்க! 2 குளத்தினிலே குட்டையிலே தாமரைகள் பூக்கும்; கூத்தடிக்கும் சிறுவர்போல் மீனினங்கள் துள்ளும்; களத்தினிலே பிணைஅடிக்கக் கார்முழக்கம் கேட்கும்: க்ன்னியர்கள் காளையர்கள் கலையிலும் மன்றம் உளத்தினிலே மகிழ்வூட்டும்; உணவுக்கா பஞ்சம்? ஒப்பில்லா அவ்வாழ்வா இந்நாளின் வாழ்வு? வளத்தினிலே வாழ்வடைய வழிகாட்ட வந்த 3. வானெழுந்த ஞாயிறுகம் அண்ணாவே வாழ்க! 3