பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கடலோடு தொடுவானம் கலந்திருக்கும்; நெய்தற் கன்னியரும் காளையரும் மணல்மேட்டில் தாழை மடலோடு மடல்சாய்க்க வரும் அலைகள் தாவும்: வரிநண்டு வளையோடும்; புன்னைமலர் சிந்தும்; திடலோடு கட்டுமரம் சிறுதோணி வற்றாக் கடல்வளத்தின் சீர்பாடும்; இதுமுன்னாள் செம்மை! குடலோடு குடலொட்டும் கொடுவாழ்வைப் போக்கும் குன்றெழுந்த ஞாயிறுகம் அண்ணாவே வாழ்க! 4. விண்பூத்த மீனினமும் பூந்தென்றல், சோலை - வேங்பூத்த நீள்மலையும் மலைமுகட்டும் வானும் கண்பூத்த விரிகடலும் எழுந்தெழுந்தே நீண்ட கரைமோதும் வெள்ளலையும், திங்கள் ஒளி வீசும்! பண்பூத்த என்கவிதை ஞாயிறொளி வாழ்வாம்! பணக்காரர் பாட்டாளி பகுத்துண்டு வாழ மண்பூத்த ஞாயிறுகம் நல்லறிஞர் அண்ணா! பாலாற்று மணல்போல வாழ்கபல ஆண்டே! 5 இந்நாட்டில் வாழ்ந்திடுவோர், எழுத்த்றிந்த மேலோர், இனியமொழி அருகிருந்தோ தொலைவிருந்தோ - கேட்டோர், தன்னாட்டிற் கேஉழைக்கும் தற்பெருமை இல்லாத் தனித்தலைவன், குணக்குன்று, காஞ்சிதந்த செம்மல் தென்னாட்டு ஞாயிறெனத் செவிகுளிரச் சொல்வார்! செந்தமிழ்போல் நம்தண்ணா வாழ்கபல ஆண்டே! எங்காட்டுக் காரிருளும் ஒளிசெய்ய வந்த இளம்பரி தி நமதண்ணா,எனவாழ்த்து வோமே! 6 - 5-66 - 9 س به تمامی ః