பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கும் கரம் ! செஞ்சொற் றமிழால் சிறுமை களையும் சிறுகதையில் நெஞ்சினை அள்ளும் நிகழ்ச்சியைப் பின்னி நெறிமுறையே வஞ்சியர் காளையர் வாழ்வினைச் செம்மை வழிப்படுத்தும் விஞ்சையைக் காக்கும் கரமெங்கள் அண்ணா வியன்கரமே 1 செம்பொன் உருக்கிச் சிலைசெய்யும் கொல்லர் திறன்மிகவே அன்பைப் பெருக்கி அறிவைப் பெருக்கி அடர்ந்தபகைத் துன்பம் விலக்கும் வழியை விளக்கித் துடிப்புமிகு தம்பியர் காக்கும் கரமெங்கள் அண்ணா தனிக்கரமே! 2. குளத்தினைக் காக்கும் கரையினைப் போலக் குடிமுறையின் வளத்தினைக் காக்க வழிமுறை காட்ட வருபகையின் களத்தினை வெல்லக் கலையில் சாலையின் கட்டிளைஞர் உளத்தினைக் காக்கும் கரமெங்கள் அண்ணா ஒளிக்கரமே 3 பாட்டால் உலகப் பசியை விரட்டும் பணப்பெருக்கம் ஈட்டி அளிக்கும் ஏழைக் குடும்பம் இனியமுகம் காட்டக் களிக்கும் உழைப்பால் கவலைகொள் கன்னி பர்மேக் பாட்டினைக் காக்கும் கரமெங்கள் அண்ணா பனிக்கரமே! 4. மங்கும் உலகின் இருளைக் கிழித்திட வானெழுந்து பொங்கு கடல்மிசைப் புத்தொளி வீசும் புதுகிலவாய் எங்கும். தமிழை எதிலும் தமிழை இழையவிட்டே - மங்காது காக்கும் கரமெங்கள் அண்ணா மலர்க்கரமே! 5 அல்லும் பகலும் உழைத்து வயிற்றுக் கரிசியின்றித் தொல்லை அடைந்தோர் மனமும் வயிறும் குளிர்ந்திடவே கொள்ளை விளைவைக் கொடுத்துத் தமிழர் குடியரசை எல்லெனக் காக்கும் கரமெங்கள் அண்ணா எழிற்கரமே! 6 - 3