பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காட்டைப் பிடித்த கரும்புகைத் தீயெனக் கால்கிறுத்தா ஒட்டைக் குடிசை எரிந்திடக் கண்டே உளங்கலங்கி நாட்டின் பெருங்குடி ஏழை விழியில் நகைமிளிர வீட்டினைக் காக்கும் கரமெங்கள் அண்ணா விறற்கரமே 7 பண்டைய வாழ்வும் வளமும் மிகுந்த பழந்தமிழோ . தொண்டியைப் போலத் தொலைந்ததை எண்ணித் துடிதுடித்தே அண்டையர் காண அருந்தமிழ் பேணி அரசியலில் - வண்டமிழ் காக்கும் கரமெங்கள் அண்ணா மழைக்கரமே 8 வாக்கினைக் கேட்டு மனஇருள் ஒட்டி வருந்தமிழர் வாக்கினைக் கேட்டு வழங்கி அரசின் மணிமுடியைத் துக்கினர்; சூட்டினர்; துள்ளினர்; தூய்மைத் தமிழரசைக் காக்கும் கரமெங்கள் அண்ணாதுரையின்நெடுங் கரமே 9 28–8–67