பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணா அறுபது உலகில் பிறந்தே உயிர்வாழ்வோர் தம்முள் விலையில் விரிசுடரே அண்ணா-மலையிடையில் தோன்றிய மாமருந்தாய்த் தோன்றித் தமிழகத்தின் சான்றோனாய் வாழ்ந்தான் தனித்து! தனித்துத் தமிழகத்தின் தாழ்மையைப் போக்க இனித்த தமிழ்பேசி என்றும்-மனித்தப் பிறப்புப் பெருவாழ்வு பெற்றிடவே அண்ணா அறத்தொடு செய்தான் அரசு! அரசில் தமிழரசை கல்லரசாய் ஆக்கி முரசறைந்து வாழ்த்தினான் மூத்த உரைசால் நமதண்ணா நல்லறிஞன் பேரறிஞன் அண்ணா! அமைதியின் தோற்றம் அறி! - அறிந்தார் அறியார் அறிவரே அண்ணா நெறிகின் றொழுகிய நேர்மை!-வெறிகமழ் பூஞ்சோலை உள்ளே புகுந்து வருகின்ற காஞ்சி இளங்தென்றற் காற்று! தென்றல் இனிமைகற் றேனினிமை வாய்ப்பேச்சில் மன்றில் இனிக்கும் நமதண்ணா-முன்றில் இளநகை இன்சொல் எவரெவர்க்கும் கூட்டும் உளத்தோன் உயர்ந்தவனாம் காண்! காண அறிவுமிகு கற்றோர்கள் நற்சிலையை ஓணம் கலக்கும். கடல் ஒரம்-பேணிப்பின் போற்றிப் புகழ்கட்ட பொற்பறிவன் அண்ணாவை ஏற்றிப் புகழ்வோம் இனி!