பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கானகத்தில் பழங்கோதித் தளிரைக் கோதிக் கண்சிவந்த கருங்குயிலே கன்னி யர்க்குத் தேனகத்தில் பாய்ச்சுகின்ற அறிஞர் அண்ணா . திசைநோக்கிச் சென்றிடுக! விடியற் காலை வானகத்தில் திங்களைப்போல் அழகு மாறி நின்னயந்தாள் வாழுகின்றாள் என்று சொல்க! நானகத்தில் வழிபடுவோன் அறிஞர் அண்ணா நயந்திடுவான்; நற்செய்தி கொண்டு வாயேன்! மாலையிட்ட பைங்கழுத்த செங்கண் கிள்ளாய்! மனக்குறையை நீயன்றிப் பின்யார் கேட்பார்? காலையிட்ட செங்கதிரோன் அறிஞர் அண்ணா கண்பட்டேன்; நிலைகெட்டேன்; காதல் கொண்டேன்; ஆலையிட்ட கரும்பானேன் அணுகிச் சென்றே - ஆட்கொள்ள வேண்டுதி!ே மறுக்க மாட்டார்! மாலையிட்ட மணநாளுக் கேற்ற நல்ல மலர்மாலை எனக்கொன்று வாங்கி வாயேன்! 68"س-8-10