பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாலைவாங்கி வாயேன்! மலையாடும் மாமயிலே காஞ்சி அண்ணா மனங்கவர்ந்து போனதினால் மையல் கொண்டேன்! அலையாடும் சென்னைககர் முதல மைச்சே! அழுதழுது பசப்பேறி உணவும் இன்றிக் கலையாடும் மலைச்சாரல் தவழு கின்ற - கார் கூந்தல் நின்னயந்தாள் என்றே சொல்க! விலையாடும் மருதநிலச் செந்நெல் புன்செய் விளைபொருள்கள் விருப்பம்போல் உண்ண லாமே! மண்பூத்த மாமலரில் தங்கித் தங்கி . வாய்மடுத்த மதுமயக்கம் மண்டைக் கேறப் பண்பூத்த அறுகால வண்டே இந்தப் பாராளும் முதலமைச்சர் அறிஞர் அண்ணா விண்பூத்த ஒளிச்சுடரைக் கண்டிங் கோர்பெண் மேனியெலாம் பசப்பேற உறக்கம் இன்றிக் கண்பூத்தாள்: கின்னயந்தாள் என்றே சொல்க! கார்முல்லை மலர்க்காட்டில் களிக்க லாமே! குளத்தினிலே சிறகடித்து மூழ்கி மூழ்கிக் . குறுங்கெண்டைச் சேலுண்ணும் செங்கால் நாராய்! உளத்தினிலே காதலெனும் தீயை ஏற்றி ஊராளச் சென்றுவிட்டார் அறிஞர் அண்ணா! வளத்தினிலே எக்குறையும் இல்லை! ஆனால் வாழ்வில்லை எனக்கூறி வருக! மன்றல் களத்தினிலே உன்னிணைக்கே ஏற்ற நல்ல கண்கவரும் மனிதருவேன்! கவலை போக்கே!