பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவலர் போற்றும் காவலன் பாடுக புலவிர்! பாடுக நீடே! நாடர சாளும் நம்முதல் அமைச்சை கத்து கடலும் கடலலை அருகில் சிற்றுளி செதுக்கிய சிற்பச் சிறப்பும் கனிசிறந்ததுவே நற்றமிழ்க் கச்சி! கச்சி யோனே மெச்சும் அண்ணா! உச்சி மாமலை ஆடும் மழைபோல் தமிழக மடமை வறுமை தவிர்க்கும் - அமிழ்தினைப் போன்றோன் அறிஞர் அண்ணா! மிடிமைக் கரிசி குடிமைக் கிருப்பு கெடியோன் குன்ற நீள்யூம் புகாரைச் சென்னையில்.கவினுற இந்நாள் தேக்கித் தென்னவர் சீர்த்தியை உலகுக் களித்தோன்! வரிகூட் டாது மக்கள் அரசின் உரிமை ஒழுங்கை விரிவு செய்தோன்! விளைபொருள் படிப்படி ஏறிய விலையைக் களைந்து வாழ்க்கைக் கொடுமையைக் களைந்தோன்! அன்னை மொழியாம் கன்னித் தமிழை இந்நாள் அரியணை அஞ்சா தேற்றியோன்! நாட்டில் உழைக்கும் கலிமிகு ஏழைப் - பாட்டாளி மக்கள் பசிநோய்ப் பகைஞன்! பெண்ணிற் பெருந்தகை அண்ணியர் இராணி மனையின் விளக்காம் வாணுதல் கணவன்! திங்கள் செந்தமிழ்த் தென்றல் மலர்போல் எங்கள் முதலமைச்(சு) அண்ணா இனியன் நாவலர் போற்றும் காவலன்! - - பாவலர் பாப்போல் வாழ்கபல் லாண்டே! 2-8--،68 ! {} 15 20 25 27