பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. பைஞ்சோ றளிப்பர்! பசியா றியபின், பொழுது விடியப் புட்போல் எழுந்து தொழுது ஞாயிறைத் தொடர்க வழியை கடலலை தந்த சுவைக்கால் கண்டைத் தொடரும் சிறாரும் தோணியும் காண்பாய்! நீலக் கடல்மேல் கி.மிரும் பரிதிக் கோலத் துண்டே நாவாய் கொணர்ந்த கட்டு மரமும் கடல்தரு பொருளும் கொட்டிக் குவித்த குரைகடற் கரையில் கழியிடைப் பூத்த நெய்தல் விழியால் எள்ளி நகைக்கும் இளம்பெண் ஒக்கும்! புன்னை பூக்க முத்து சிரிக்கும் சென்னைப் பட்டிணம் செல்க! ஆங்கே தமிழக அரசைத் தாயக அரசை - அமிழ்தெனும் தம்பியர் அரசவை இருக்க முதலமைச் சாகி முறைசெயும் மேலோன் கச்சி யோனே! காட்சிக் கெளியன்! இளைஞர் உளத்திடை எழுதா ஒவியம்! கிளைஞர்க் கென்றும் கிளைப்பூங் காற்று வெஞ்சின மில்லான்! செஞ்சொல் மொழியான்! அறிவியல் அறிஞன் அரசியல் அறிஞன் நெறிமுறை வழுவா நேர்மை யாளன்! கறைஇலாத் திங்கள்! காய்கதிர் ஞாயிறே! என்றும் யாண்டும் எவர்க்கும் இனியன்! நன்றல தறியான்! நற்றமிழ் மேதை! நிற்ைகடல் பாயும் நீளாறு போல முறைவேண்டு வோர்க்கும் குறைவேண்டு வோர்க்கும் வேண்டியார் வேண்டி யாங்கு விள்ை க்கும் ஆண்டகை அறிஞர் அண்ணா! மூண்ட குறைபல முடிப்பன் செலினே! 1–8–68 35 40 45 50 55 60