பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவராற்றுப்படை கடலிடை எழுகதிர்த் திங்கட் காட்சி மலையிடை ஒழுகும் அருவி வழங்கும்! செங்கண் கருங்குயில் சிறகடி பட்டே பொன்னுதிர் வதுபோல் பூக்கள் உதிரும்! பூக்கொய் தோகையர் புதரிடை மயில்கள்! கழையாடு கூத்தன் கல்லாக் கடுவன்! முட்பலா தூக்கி முன்வரு மந்தி முழவினை ஆர்க்கும் கூத்த முதியவள்! மான்பயில் சாரல் மலைவழி தாண்டி ஊணுக்காக ஒவ்வொரு நாளும் பழுமரம்தேடும் பறவையைப் போலக் கண்டதும் கேட்டதும் கற்றதும் எண்ணி மண்டிய இருள்சூழ் மலர்தலை உலகில் எண்ணி யெண்ணி இரவும் பகலும் செஞ்சொல் உவமை சீர்தளை கூட்டிப் பாப்புனைந் தளிக்கும் பைந்தமிழ்ப் புலவ! அடர் கிளை இருந்தே ஆயன் இசைக்கப் படர்புலம் மேயும் பால்மடிப் புனிற்றா நல்கிய பாலும் கற்புளி மோரும் - ஆய்மகள் தருவள்! அருந்திய பின்னர் மாமரச் சாலை வயல்வெளி கடந்தால் தாமரைக் குளமும் தாங்கலும் காண்பாய்! ஊருக் குழைக்கும் உழவர் குடியின் சீரும் சிறப்பும் சென்றால் புரியும்! ஏழைகள் எனினும் இன்முகம் காட்டி வாழை விரிப்பர் வந்தோர் உண்ண! விண்மீன் பூத்த விரிவான் போலத் தண்ணீர் பூத்த தாமரைக் குளத்து யானை முன்கை மானும் வராலும் சேலும் செங்கெல் அரிசியும் கலந்த 1 () 15 20 25 30