பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தழைவற்றிப் பொய்கைத் தடம்வற்றி நாட்டில் மழைவற்றி வாழ்கின்ற போழ்தும்-கழைச்சுவை கண்டெடுத்து நல்கும் கருணா கிதியமைச்சன் உண்டென்றறிவே உணர்! முன்னேற்ற நற்கழகம் இங்காள் முடிந்ததென பின்னே முணுமுணுத்த பேதைகளை-இந்நாள் தலைதாழ்த்தி வாயடைக்க வந்த தமிழ்மகனே கலைஞன் முதலமைச்சன் காண்! கட்டி வளர்த்துக் கருத்தில்லார் கைகோத்தே இட்டு வரும்கல் இயல்புடையோன்-மட்டில் அகழ்வாரைத் தாங்கும் அறிவுடையோன் என்றும் புகழோடு வாழ்க பொலிந்து! வேற்றார் நமையடுத்த மாநிலத்து மேலோர்கள் போற்றிப் புகழும்.நற் பொற்புடையோன்-மாற்றார் மதிக்கும் முதலமைச்சன் மங்காத் தமிழுக்(கு) உதித்த சுடர் என்(று) உணர்! - காட்சிக் கெளியான்; கடுஞ்சொல்லே கற்றறியான்: வீழ்ச்சி அறியாத மேலோனே!-தாழ்ச்சித் - தளைவெட்டி வீழ்த்தித் தமிழகத்தைக் காக்கும் உளத்தோன் கலைஞன் உணர்! இன்றுள்ள மாணவர்கள் இன்பத் திருநாட்டை நன்றே நடத்தும் நடைபயிலப்-பொன்றா! வழிகாட்டும் எங்கள் வளமார் கலைஞன் விழிகாட்டிற் கென்றே விளம்பு! . தமிழை அரசேற்றித் தக்கோர் வியக்க நமதரசை ஆளுகின்ற கல்லோன்-நமையெலாம் ஈனற தமிழ்த்தாய் உலகிற்கே ஈன்றளித்த ஆன்றவிந்த கற்கலைஞன் ஆம்! 2, 3 29 30 3 1 32 33 34