பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 முரசறைந்து வாழ்த்தி முறைசெய்து காத்தே அரசாண்டு வாழ்ந்தோர் அரசர்-உரைசால் கருணா கிதியே! கலைஞனே! வாழும் தரைபோல வாழ்க தழைத்து பார்வாழும் மக்கள் பசிநோய் மருத்துவன் ஊர்வாழ் அமைச்சன் ஒருவன்காண்-சீரார் கலைஞன் கருணா கிதியே! என் நெஞ்சில் நிலைத்திருப்போன் வாழ்க நிலைத்து! கண்ணின் மணியைக் கருணா நிதியை எம் அண்ணா வழிவந்த ஆண்ம்கனைப்-பெண்ணரசி அஞ்சுகத்தாய் பெற்றாள் அவள்வாழ்க! வாழியவே செஞ்சொற் கலைஞன் சிறந்து! முத்துவேல் தந்த முனைமழுங்காக் கூர்வேலாம் இத்தரையான் எங்கள் முதலமைச்சன்-பத்தரை மாற்றுப் பசும்பொன்னாம்! மக்கள் உளமெல்லாம் வீற்றிருப்போன் வாழ்க மிகுந்து அண்ணாவின் பின்னால் அரசியலில் என்றென்றும் புண்ணும் புரையும் புகுமென்றார்-கண்ணிலெலாம் மண்வாரிக் கொட்டி வளமார் திருநாட்டை விண்கதிர்போல் செய்தான் விளம்பு நாட்டில் முரசொலித்து நற்றமிழர் வாழ்கின்ற வீட்டுத் திருமகனாய் வீற்றிருப்போன்-ஈட்டு கணிபுகழ்சேர் கல்லோன் கருணா நிதியே! பனிமலைபோல் வாழ்க இப் பார்! வள்ளுவனை ஈன்ற வளமார் தமிழ்நாட்டுப் பிள்ளைகளில் அண்ணா பெரும்புகழோன்-உள்ளம் இனிக்க அரசாளும் எங்கள் கலைஞன் தனிப்பிறவி என்றிங்கே சாற்று! 35 36 38 39 40 4 :