பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நாமணக்கும் செஞ்சொல்லான் கல்லோர் வியக்கின்ற தேமணக்கும் சங்கச் செழுந்தமிழ்ப்பா-மாமணக்கும் பூமணத்தை வாரிவரும் புத்தம் புதுத்தென்றல் காமணக்கும் முக்கனியாம் காண்! 42 பொன்னி வளங்ாட்டின் பொற்புடையோன் என்றென்றும் கன்னித் தமிழ்மொழியின் காப்பாளன்-மின்னி இடிக்கும் மழையே கலைஞன்! இனியன்! - குடிகாக்கும் செம்மலெனக் கூறு! 43 புன்னைப் பெருங்கானல் பூத்தவழ்ந்த தென்றலாம் அன்னைத் தமிழரசி அன்புமகன்-இந்நாள் கலைஞனாய் வந்தோன் கருணா கிதியே! நிலைபெற்று வாழ்க நிலைத்து! 44 பூதத்தத் தேன்சொரியும் பொன்னி வளநாட்டின் காதத்தும் வேங்கைக் கடும்புலிகாண்-ஒதுதமிழ் மாய்க்க கினைப்போர்க்கு வல்லோர்க்கும் நல்லோர்க்கும் வாய்த்த மலையருவி வாழ்த் து! - 45 நாற்பத்தா றாண்டு நலம்போல என்றென்றும் மேற்போர்த்த வானின் விரிசுடராய்ப்-பாற்குடத்துப் பேர்பெற்ற வாணிப் பெரும்புலவன் வெண்பாப்போல் சீர்பெற்று வாழ்க சிறந்து 46 棗 . 蟒 . 橡 嫌 பாட்டெழுதி வாழ்க்கைப் பசிப்பிணியை ஒட்டாத நாட்டில்வாழ் எம்போன்ற கற்கவிஞர்-வீட்டின் வறுமையை மாய்க்கக் கருணா கிதியாம்! பொறுமணமே சற்றே பொறு! . கலைஞர் கவிதை மலருக்காக 2-11–’69 அன்று எழுதப்பட்ட கவிதை இது.