பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சுகத்தாய் மகன் வாழ்க! விண்பூத்த இளம்பரிதி கலைஞர் ஏறு தமிழகத்தின் முதலமைச்சர் வீசு தென்றல்! பண்பூத்த சொல்லழகர் நாட்டில் வாழும் பாட்டாளிப் பெருமக்கள் தோழர்! தஞ்சை மண்பூத்த திருக்குவளை மைந்தர்! மக்கள் மனம்பூத்த நற்கருணா கிதியார் நாட்டில் புண்பூத்த நிலைமாற்றும் அரசை ஒம்பிப் புகழோடு பல்லாண்டு வாழ்க கீடே! உண்ணிரின் குறைதீர்த்தார்: சிற்றுார், பேரூர் உழைப்பாளிப் பசிதீர்த்தார்; ஏழை மக்கள் கண்ணிரின் குறைதீர்த்தார்; பரிசுச் சீட்டால் காசில்லாக் குறைதீர்த்தார்; வானம் பொய்க்கத் தண்ணீரின் குறைகண்டு வறட்சி கண்டு தத்தளித்த காலத்தும் ஈன்றெ டுத்த பெண்ணிர்மைத் தாயன்பால் மக்கள் காத்துப் பேரரசை நடத்துகின்றார் வாழ்க நீடே! கின்று குடி செய்திருந்த மனை இல் லார்க்கு நிலமளித்தார்; வீடளித்தார்; அயலூர் எங்கும் சென்றுவரு பேருந்தின் கட்ட ணத்துச் - . செலவைகனி குறைத்துவைத்தார்; கண்கள் காண இன்றெங்கும் திருக்குறளை எழுதி வைத்தார்; இவரரசு நல்லரசாம் என்றே மக்கள் மன்றெங்கும் முழங்குகிறார்; அமைச்சர் வாழ்க! அஞ்சுகத்தாய் மகன்வாழ்க கலைஞர் வாழ்க! 3 *