பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஆலைகளைத் திறந்துவைத்தார்; நீண்ட கூவ ஆற்றினையும் மணக்க வைத்தார்; கற்கும் பள்ளிச் சாலைகளின் புகுமுகத்தைத் திறதுங் வைத்தார்; தமிழ்ப்புலவர் வாழ்வளித்தார்; மறந்தார் என்னை மாலையிலே காற்றாடும் பேரூர் சென்னை மறிகடலின் கரையழகைத் திறந்து வைத்தார்; வேலையிலே ஓய்வுபெற்றோர் தமக்கும் நல்கி + மேன்மையினைத் தமிழரசுக் களித்தார்; வாழி! சொல்லடியும் கல்லடியும் பட்டார்; உண்மை! தொண்டர்க்கிங் கிவையெல்லாம் பரிசா? சொல்வீர்! வில்லடியும் வாளடியும் வாங்கி வாங்கி விடுதலைக்கே வாழ்ந்தஇனம் தமிழர் என்போம்! கல்லடியும் கசையடியும் தமிழைக் காக்கக் . கண்டவர்தான் நம்கருணா கிதியார்; வாழ்க! எல்லையிலாப் பேரின்பம் கலைஞர் கண்ட எம்கல்லக் குடிப்பெயரே! அமைச்சர் வாழ்க! அண்ணாவின் புகழ்மணக்கும் கலைஞர் தம்பி ஆளரசு கல்லரசு! ஏழை மக்கள் கண்ணான தமிழரசு பன்னு றாண்டு . . . . . கழகத்தின் காப்போடு கிலைத்து கின்று பண்ணான புகழ்பரப்பி மக்கள் காத்துப் பார்புகழ கம்.கருணா கிதியார் என்றும் அண்ணாவின் வழிபற்றித் தமிழகத்தின் அரசாள வேண்டுமென வாழ்த்து வோமே! 6–2–70 4. 5