பக்கம்:வாணீபுர வணிகன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-9) வாணிபுர வணிகன் 5 வே, வே. 5 வெள்வேடம்பூண் வெறியரு முண்டே, அம்மாதிரியே இதுவு மாகும் காதலி எவளேக் கைப்பிடித்தாலு ர்ே, உமது தலையாய் உலகினி லிருப்பேன். உடனே போகலாம், வேலையு முடிந்தது ' இன்னும் இருப்பனேல், இதனிலும் மூடேைவன். மணக்க வந்தது, மடத்தலே யொன்றுடன், மறுத்தும் போவது மடத்தலே இரண்டுடன். பெண்மணி, விடை யளிப்பாய் செய்த சத்தியம் பிசகேன்; என் வருத்தத்தைப் பொறுமையோடு சகிப்பேன். (தன் பரிவாரங்களுடன் போகிருன்.) இப்படித்தான், விளக்கு விட்டிலே எரித்தது அந்தோ ! என்ன சுத்த முட்டாள்கள் ! கோருகிற சமயத்தில், தங்கள் புத்தியினலேயே தோல்வியடையும் படியான யுக்திமாத்திரம் இருக்கின்றது. "தலைவிதியின்படியே தாரமும்தண்டனையும்', என்கிற பழ மொழி விண் போகுமா ? வா, போவோம்.--திரையைத் தள்ளிவிடு, நீலகேசி. ஒரு வேலையாள் வருகிருன். எங்கே என் எஜமானி ? இதோ என்ன வேண்டும் உனக்கு : அம்மனி, தமது வாசற்படியில் வாணிபுரத்து வாலிபர் ஒரு வர் இழிந்திருக்கிருர் தனது எஜமான் வரவைத் தான்முன் னதாகக் தெரிவிக்க வந்ததாகக் கூறுகிருர். அவரிடமிருந்து தக்க மரியாதைகளுடன் வந்திருக்கிருர். உபசார வார்த்தை களும் உன்னத மொழிகளும் அன்றி, உயர்ந்த வெகுமதி களையும் கொண்டுவந் திருக்கிருர் இவரைப்போன்ற உண்மையான காதலுக்குத்தகுந்த உத்தமமான தாதனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாணீபுர_வணிகன்.pdf/59&oldid=900217" இலிருந்து மீள்விக்கப்பட்டது