பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேமநிதி இராகம் செஞ்சுருட்டி. தாளம். ஆதி. வீணே செலவு செய்யக் கூடா தண்ணே. போனல் பணம் திரும்பி வாரா தண்ணே. (i) எண்ணி எண்ணிப் பணத்தைப் பார்ப்பாய் அண்ணே கண்ணும் கருத்துடனே சேர்ப்பாய் அண்ணே. (i) மண்ணில் பணமில்லையேல் மாண்பில்லையே. முன்னும் பின்னும் எண்ணம் நண்ணும் நலம் பெறவே (i) ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தால் ரெண்டாகுமே என்னும் கணக்கறிந்தும் இந்நாள் நீ என்ன செய்தாய் (i) சின்ன எறும்பும் தினி சேமிக்குமே-நல்ல எண்ணமுள்ள மனிதன் தன்னைக் காத்துக் கொள்ளவே (i) 93