பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பெருமரபைக் காத்து நின்ருங் பாவலன்ே புதுவைநகர்க் கவிஞர் கோவே! பாரதிரப் புரட்சிப் போர்ப்பரணி பாடி பைந்தமிழின் மானத்தைக் காத்து நின்ருய் போர் உதிரம் பாய்ந்திடினும் பெருங்கள்த்தில் புறங்கண்டு பகைதன்னை வென்ற வீரா யாருண்டு உன்னைப் போல் நெஞ்சுரத்தில் என்னகாரணம் நீ எங்கே சென்ருய்? நல்லவரைக் கொல்லுகின்ற நச்சுக் கூட்டம் நாட்டிலே நிறைந்த பெரும்நலிவு கண்டோ: கொல்லாமல் கொல்லுகிற அஹிம்சை வீரர் கொடுமை நோய்க்கிருமிகளாய் ஆதல் கண்டோ! பொல்லாங்கு பொய் சூதே தென்றலாக போலிகளின் தன்னலமே உயிர் மூச்சாக பல்லாண்டு பாடிவரும் இந்த நாட்டை பார்த்ததினிப்போதுமெனப் போய்விட்டாயோ? காலை இளவேனில்வரு கதிரவன் போல் கனகமய ஒளிக்கவிதை கதிர்கள் தந்தாய் சோலையிலே சுதந்திரமாய்க் கூவுகின்ற சொக்கு தமிழ்க்குயிலே நீ சென்னை வந்தாய் பாலேயெனக் காய்ந்துவரும் கலையை நம்பி பலவிதமாய்ப் புதுப் பணிகள் காணவந்தாய் மூலையிலே ஒதுங்குகின்ற கலையோ உன்னை மெளனமாய்ச் செய்ததினி என்னே செய்யும்? புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுரின் பெரும் பிரிவிலே நேர்ந்த துயரச் செய்தி. 164