பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே சென்ருய்? பட்டத்துப் போர்யானை பவனி வந்து பாதையிலே புதைமணலில் வீழ்ந்ததேபோல் பட்டணத்தை நீ பெரிதும் நம்பிவந்தாய் பணந்தின்னும் படத்தொழிலைக் காண வந்தாய் கட்டிவைத்த பணப்பையைப் பிரித்துவிட்டாய் காக்கைகளின் கூட்டத்தில் கொட்டிவிட்டாய் கட்டு மாங்கனியான கவிகள் தந்தாய் கடை வைத்தாய் காலன்முன் கட்டிவிட்டாய்! செந்தமிழின் கவிக் காட்டில் நிகரில்லாத சிங்கமென வாழ்ந்த நீ சென்னைவந்தாய் சிந்தையிலா இருட்கூட்டில் விளக்கு வைத்து செவ்வொளியை காணலாம் என்று வந்தாய் தந்தியிலே ஊளையிடும் நரிகள் முன்னே சாரமிகும் தமிழ்விணை மீட்ட வந்தாய் சந்தையிலும் சங்கீதம் கேட்க வந்தாய் சரிப்பட்டு வரவில்லை சாய்ந்துவிட்டாய்!

  1. 63