பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ള് இப்ாட்டமுத ஓடைகளும்,பாலுறும் அருவிகளும் இற்றெடுத்து ஓடிவரும் ஊருக்கும்ாலையிடும்: ஆற்றுத்துறையருகே ஆழமடுப்பள்ளங்கள்! தாழ்ந்தபழத் தோப்பில் தாவுமண ங்ககவே சூழ்ந்துவரும் சுற்றங்கள் சம்பந்தம் பேசி தாழம் புதர்வழியே தாவிப் பறந்தாங்கே வாழ்ைப் பழந்தேங்காய் வரிசைச்சீர்கொண்டுவரும். தோப்பெல்லாம் வீடுகட்டும் தூக்களுங் குருவிகளும் சீப்புச் சிறகுடனே சிங்காரக் கொக்குகளும் கூப்பிடவே ஓடிவரும் காடைகளும் கெளதாரி! மாப்புள் கருடனுடன் மைனவும் விளையாடும். கோயில்குளச் சாவடியில் குலுங்குமாம் நந்தவனம் வாயில் நுழையுமுன்பே வண்டுகளோ வரவேற்கும் சாயல் நீலமயில் சாய்ந்தாடும் அரசமரம் ஆயுள் வலிமைதரும் ஆற்றுாராம் எம்மூரில்

  • .