பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசை கொண்டதனுல் பெரியமலைக் காடுகளை பூராவும் தீவைத்துப் பூத்த புதுக் கரியாக்கி யாருக்கோ சேர்க்கின்றீர் ஆயிரமாம் பணமூட்டை திராத தாகத்தைத் தீர்த்திடுமா கோடிபணம்! சீரான நதிஓடி வருகின்ற வழியில்ஒரு பாருங்கல் வீழ்ந்துப் பாதை தடுக்குதென்பீர் கூருதிர் காரணங்கள் கொடுமலையே வந்தாலும் நீருகச் செய்திடவே நிற்குமாம் யந்திரங்கள்! நீர்கூறும் காரணத்தை நிசமென்று தான்நம்ப யாரீங்கு உள்ளார்கள் ஏனிந்தச் சிறு கதைகள்? தேர்போன்ற மலைச்சாரல் தாவரத்துப் பச்சைக்குக் கூர்நாக்குத் தீவைத்திர் குளிர்வான மழைஎரிய! தேமலையாம் வேங்கடத்தில் தலைமொட்டையாவது - போல் மாமலையின் வனமெல்லாம் படுமொட்டை ஆக்கியபின் பூமாலைப் பெரியோரை புதியமரம் நடச்சொல்லி ஏமாற்றி குல்ஆற்றில் ஊற்றுமா காற்றுமழை? ix.