பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் உலகே உலகே நலந்தானே? உருண்டை வடிவம் சுகந்தானே? நிலமே நீண்ட நீர்கடலே நெடுமலை மழையே நலந்தானே! ஒளியே உயிரே ஒலிவானே உறவுகள் எல்லாம் நேர்தானே! நலமா என்றே கேட்கின்றேன் நான்தான் அணுவின் குண்டுமகன்! ஒழுங்காய் மானிடர் வாழ்ந்தாலே உன்னைக் காப்பேன் உயிர்போலே ஒழுங்கே தவறிப் போனுலோ ஓகோ ஓயாப் பேயாவேன்! விழுங்கும் சண்டைப் பசிவந்தால் உலகம் என்சிறு ஆகாரம் மழுங்கும் மூளை மாந்தரிடம் மறக்காமல் இதைச் சொல்லிவிடு