பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அதி நுட்ப நூல் கற்று அவையடக்கி அன்பரையும் மிதிக்கின்ற மத மறியான் மனமென்ற யாழ் மீட்டும் கதி யொன்று தானறிவான் தூரத்தே ஆட்டிடையன் விதி யூதும் குழலோசை உயிரறிவான் மற்றறியான்! ம்ாற்றறியாப் பொன்மயமாம் மனமென்னும் புது மேடை காற்றெழிலி யோடு எழும் கன்னியிளங் கித மழை ஊற் றெழிலி! இவ்வுலகின் உள் காந்தல் நோய் திர சாற்றமுதத் தேன் கவிதை சற்றே நீ பாடாயோ?