பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலெடுத்து வைத்ததுவும் அவன் கண்ட இக்கால அரசியலின் காட்சிகளை சுவையான கவியாக்கி சொல்லென்று ஆணையிட்டீர் அவையின் முன்னின்று அடியேனும் சிலசொல்வேன். உலகின் வியப்பான உயர்மலையின் ஒளிசேரும் தலையின் மணிமுடியின் தவக்கதிரைத் தான்கண்டான். தொலைவிண் சிகரத்தைத் தொட்டுவிட்டான் தொல்ஞானக் கலையின் ஆழத்தைக் கண்டகவிக் கருமுத்து! கவியரசன் பவனியிலே கண்டதென்ன சொல்லென்றீர் கவிகண்ட காட்சிகளைக் கணக்காகச் சொல்லிதமிழ்க் கவிகட்ட நான்கட்டுத் தறியல்ல; மூங்கிலிலே சுவைத்திட்ட பனிநீரும் பண்துளியும் நானல்ல! ΧΧΧ