பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டதும் எதிரிகளே காலடி வீழ்வதனால் கொலைமிகு போரில்லை கோட்டை விழவில்லை கொல்லாச் சைனியமாய்க் கூடிய வீரர்குலம் எல்லாம் கலைஞர்களாய் இயங்கினர் கவிஞர்களாய்! தயரதன் ஆட்சிமிக தெளிவாய் நடந்துயர அரசன் அவனுடைய அமைச்சர் காரணமாம் அறிவின் ஜோதிமலை அறவோன் மாமுனிவன் அருளின் பேருருவாய் அமர்ந்தான் வசிட்டனெனும் வானவன் யோசனையால் வலிமை அரசர்க்காம் மோனத் தவமுனிவன் மூதறி வுண்மையிலே ஞானத் திருவெல்லாம் நாட்டின் திறமெல்லாம் வானச் சுடரெனவே வாழ்ந்தது மங்களமாய். س4سه