பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றும் புதிதாக ஆக்காதுன் விஞ்ஞானம். ஒவ்வொன்றும் புதுமையடா, உயரியற்கை சக்தியிலே! அதனை மறுத்ததனல் அறிவரசன் ஆவாயோ? வான் பொழியும் மழையூற்றும் வாள் மின்னல் வீச்சுகளும் வந்திடுமா நண்பாஉன் விஞ்ஞானக் கூடத்தில்? உலகாளப் பேசுகிருய் உனையாளக் கற்ருயோ! வான் சுற்றி விட்டாய் நீ, ஊர் சுற்றிப் பார்த்தாயா? வாதுபல செய்யும் நீ வைக்கோலைச் செய்வாயா? ஆறறிவு சேர்ந்தாலும் ஆருென்றைச் செய்திடுமா? ஆயுளெல்லாம் முயன்ருலும் ஆல்விதையைச் செய்வாயா? நெடுங்கலைகள் ஆலுைம் நெற்பயிரைச் செய்திடுமா? சந்திரனைத் தொட்டது போல் சூரியனைத் தொடுவாயோ? யந்திரங்கள் செய்துவிட்ட சிந்தனையில் நீ காணும் காட்சிகளின் காட்சியதாய் கற்பனையின் சூழ்ச்சியதாய் கருத்தின்கருவொளியாய்க் காணுவதே சக்தியடா! 4.