பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒலி உயிர்த் தெய்வம் ! உலகெனும் மரத்திருந்து உதிர்ந்தது மற்றுமோர்நாள். ஒளிக்கதிர் சூரியன் போய் ஒளிந்தனன் மேற்குத் திக்கில் இறந்தது ஒரு நாள் ஆங்கே இரவெனும் பறவை வந்து பறந்தது இருட்டிறக்கை விரிந்தது மெளனச் சோகம். இனந் தெரியாத அச்சம் எழுந்தது இதயக்காட்டில் புகைந்தது குப்பை மேட்டில் புகுந்தது புது நெருப்பு. வானத்தை உற்றுப் பார்த்தேன் ஒளிமீன்கள் என்னைக் காண விரும்பாமல் விண்திரைக்குள் விரைந்தன வானம் எங்கே? 18