பக்கம்:வானொலியிலே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வானொலியிலே......
1. தகுதியும் திறமையும்

[இதே பொருள்பற்றி வேறுபாடான தமது கருத்துக்களைக் கும்பகோணம் அரசாங்கக் கல்லூரித் தலைவர் பட்டாச்சாரியார் அவர்கள் இதற்கு முன்பு தெரிவித்தார்கள்.]

``கல்வி நிலையங்களிற் சேர திறமையே முதல் தேவை” என்ற தலைப்பைக் கேட்டதும் ஒரு பேச்சின் தலைப்பு இவ்வளவு நீளமா ? என்று எவரும் பயந்துவிட வேண்டாம். இது பேச்சின் தலைப்பு அல்ல ; மாணவர்களின் புண்பட்ட மனதுக்குக் கிடைக்கும் விடை இது.

கல்வி நிலையங்கள் என்பது ஆர்ட் காலேஜ், மெடிகல் காலேஜ், இன்சினீரிங் காலேஜ், அக்ரிகல்ச்சரல் காலேஜ், என்கின்ற கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லுரி, அறிவுத் தொழிற் கல்லூரி, பயிர்த்தொழிற் கல்லூரி ஆகியவைகளைக் குறிக்கும். அவைகளிற் சேர்ந்து படிப்பதற்கென்று பல பிள்ளைகள் விண்ணப்பம் போடுவது வழக்கம், கல்லூரி அதிகாரிகள் திறமையான பிள்ளைகளைப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக்கொண்டு மற்ற பிள்ளைகளை வடிகட்டி அனுப்பி விடுவார்கள். சேர்க்கப்பெற்ற பிள்ளைகளெல்லாம் முன்னேற்றமடைந்த ஒரு வகுப்பைச் சேர்ந்ததாகவும், தெருவில் நிற்கும் பிள்ளைகள் எல்லாம். பிற்போக்கடைந்த வகுப்புகளைச் சேர்ந்ததாகவுமிருக்கும். அப்பிள்ளைகள் எல்லாம் ஏன் எங்களுக்குக் கல்லூரிகளிற் படிக்க இடமில்லை எனக் கேட்பார்கள். அதற்குக் கல்லூரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/10&oldid=486876" இலிருந்து மீள்விக்கப்பட்டது