பக்கம்:வானொலியிலே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகுதியும் திறமையும் 15

கம்பாவது விளையும். உணவு நெருக்கடியான இக்காலத்தில் அது அதிக விளைவுக்குத் துணை செய்வதாகவுமிருக்கும்.

கட்டிட வசதிக் குறைவான இக்காலத்தில் அவற்றை இடிக்க மனமில்லாவிட்டாலும் கல்லூரிகளின் ஆசிரியர்களையாவது மாற்றியமைக்கவேண்டும். ஆசிரியர்களை மாற்றியமைக்க அரசாங்கத்தினருக்கு மனமில்லாவிடில் அரசாங்கத்தினரையே மாற்றியமைக்க வேண்டும். இதுதான் நாட்டு நலனுக்கும் வருங்காலக் குடி ஆட்சிக்கும் ஏற்ற சிறந்த தொண்டாகும். இதன் மூலம் திறமையற்றவர்களைத் திறமை கொண்டவர்களாகச் செய்யத் திறமையில்லாத கல்லூரிகளுக்குச் செலவிடப்படுகிற பொதுப் பணத்தையும் வீணாக்காமல் காப்பாற்ற முடியும். அரசாங்கம் நடத்தும் கல்லூரிகளின் நிலையே இவ்வாறாகுமானால், தேச பக்தர் களின் பெயரால், தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்ற கல்லூரிகளைப் பற்றி என்ன சொல்லுவது?

" தீட்டின கத்தியையே திட்டிக்கொண்டிருப்பது ' எவ்வளவு வீண் வேலையோ, அவ்வளவு வீண் வேலைதான் திறமையுள்ளவர்களாகச் செய்வதும். ' சோறு தின்றவர் களுக்கே சோறு போடுவது” எவ்வளவு புண்ணியமோ, அவ்வளவு புண்ணியந்தான் திறமையுள்ளவர்களுக்காகவே கல்லூரிகளை நடத்துவதும். இன்றைய கல்லூரி மாணவர்கள் தான் எதிர்காலத்தில் இந்நாட்டை ஆளப் போகிறவர்கள் என்றால், கல்லூரிகளிற் படிப்பதிலும் நாட்டை ஆள்வதிலும் எல்லோருக்கும் பங்கு இருக்க வேண்டாமா ? கல்லூரிகளில், திறமை பார்த்து வடிகட்டியே பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்பதும், படிக்கும் பிள்ளைகளுக்குத் தக்கவாறு கல்லூரிகளை அதிகமாக்க முடியாது என்பதும், நாட்டின் நலனுக்கு ஏற்ற சொற்களாக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனெனில், இது ஒரு சமூகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/16&oldid=490151" இலிருந்து மீள்விக்கப்பட்டது